சித்தர்கள் வசித்து போற்றி வழிபட்ட புராதன மகிமை பெற்ற தலமான எமது சித்தன்கேணி மஹா கணபதிப்பிள்ளையார் ஆலயம் கடந்த கால அனர்த்தங்களின் பின்பு புருத்தாரணம் செய்யப்பட வேண்டியுள்ளது.
நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த இராஜகோபுரம் உடைந்து விழும் தறுவாயில் உள்ளது. இவ்விராஜகோபுரத்தின் தற்போதைய நிலையை இங்கு காண்க. எனவே இராஜகோபுரம் புதிதாக நிர்மாணிக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.
ஆலய கருவறையின் (மூலஸ்தானம்) தற்போதையநிலை. விரிசல்கள் ஏற்பட்டுள்ளதுடன் வர்ணப்பூச்சுகள் தீட்டப்படவேண்டிய நிலையிலுள்ளது.
தெற்குப்புற எழுந்தருளி மண்டபம். எழுந்தருளி விநாயகர் (ஐம்முகவிநாயகர் உட்பட) மற்றும் எழுந்தருளி முருகன் (ஆறுமுக சுவாமி) ஆகியோர் ஒரே அறையில் வீற்றுள்ளனர். எழுந்தருளிமண்டபமானது ஆகம விதிப்படி சில மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும் என தலைசிறந்த சிவாச்சாரியார்களினால் விதந்துரைக்கப்பட்டது.
நித்தியகல்யாணி சமேத கைலாசநாதர் உறையும் பரிவாரங்களின் தற்போதைய நிலை.
ஆலய வசந்த மண்டபம்.
வள்ளி தெய்வயானை சமேத சண்முகப்பெருமான் ஆலய தற்போதைய தோற்றம்.
சனீஸ்வரன் ஆலயத்தின் தற்போதைய தோற்றம்.
சண்டேசுவரர் ஆலயத்தின் தற்போதைய தோற்றம்.
ஆலய உட்புற சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதுடன் சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்களின் வர்ணப்பூச்சுக்கள் பொலிவிழந்து காணப்படுகின்றது.
ஆலய கூரையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக மழைநேரங்களில் பல இடங்களிலும் ஒழுக்கு ஏற்படுவதனால் அடியார்கள் பூசைகளில் கலந்து கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். விநாயகர்சஷ்டி விரதம், கந்தசஸ்டி விரதம், மற்றும் திருவெம்பாவை நோன்பு காலங்களில் மிகுந்த சிரமங்கள் ஏற்படுகின்றது.
அத்துடன் உள்வீதி நிலப்பகுதியும் பூச்சகற்றப்பட்டு பொலிவிழந்து காணப்படுகின்றது.
ஆடிவேல் பெருவிழாவினை பொங்கற்திருவிழாவாக கொண்டாடப்படும் கடம்பர முருகன் ஆலயத்தின் தற்போதைய தோற்றம்.
நாகதம்பிரான் ஆலய தற்போதைய தோற்றம்.
ஆலய தீர்த்தக்கேணியின் தற்போதைய தோற்றம்.
ஆலய வெளிப்பிரகார சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றது. இச்சுவர்களானது உடனடியாக திருத்தப்பட வேண்டியுள்ளது.