Sunday, March 13, 2016

பஞ்சதள கோபுரம் அமைத்தல் உள்ளடங்கலாக பாரியளவிலான திருத்த மற்றும் திருப்பணி வேலைகள்

இம்முறை ஆலயத்தில் பஞ்சதள கோபுரம் அமைத்தல் உள்ளடங்கலாக பாரியளவிலான திருத்த மற்றும் திருப்பணி வேலைகள் இடம்பெறவுள்ளது. எம்பெருமானின் திருவருளினால் அடியவர்கள் பலர் தாமாகவே முன்வந்து பல திருப்பணிகளை செய்வதாக தெரிவித்துள்ளார்கள்.
ஆனாலும் பகுதியளவிலான திருப்பணி வேலைகளுக்காக அடியவர்களினதும், அன்பர்களினதும் பங்களிப்பினை ஆலய பரிபாலன சபையினர் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பணியில் அன்பர்கள் மற்றும் அடியவர்களை இணைந்து செயற்படுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
பரிபாலனசபை மேலதிக தொடர்புகளுக்கு: 0772834558

சித்தன்கேணி பெரியவளவு ஸ்ரீ மஹாகணபதிப்பிள்ளையார் ஆலய பாலஸ்தாபன கும்பாபிசேகம்

யாழ்ப்பாணம் – சித்தன்கேணி பெரியவளவு ஸ்ரீ மஹாகணபதிப்பிள்ளையார் ஆலயம் பல திருப்பணிகள் செய்து புதுப்பொலிவு காண இருப்பதால் நிகழும் மங்களகரமான மன்மதவாண்டு பங்குனித் திங்கள் 05ம் நாள் (18-03-2016) வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிமுதல் 7.45 மணிவரையுள்ள சுபபுண்ணிய வேளையில் பாலஸ்தாபன கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.