யாழ்ப்பாணம் – சித்தன்கேணி பெரியவளவு ஸ்ரீ மஹாகணபதிப்பிள்ளையார் ஆலயம் பல திருப்பணிகள் செய்து புதுப்பொலிவு காண இருப்பதால் நிகழும் மங்களகரமான மன்மதவாண்டு பங்குனித் திங்கள் 05ம் நாள் (18-03-2016) வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிமுதல் 7.45 மணிவரையுள்ள சுபபுண்ணிய வேளையில் பாலஸ்தாபன கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.
சித்தன்கேணி பெரியவளவு ஸ்ரீ மஹாகணபதிப் பிள்ளையார் ஆலய திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு மகாகும்பாபிசேகம் நடைபெற எல்லாம்வல்ல விநாயகப்பெருமானின் திருவருள் பாலித்துள்ளது. இத்திருப்பணி வேலைகள் யாவும் கூடிய விரைவில் செய்து முடிக்கப்பட்டு பாலஸ்தாபனம் இடம்பெற்று எம்பெருமானுடைய குடமுழுக்காகிய கும்பாபிசெகப் பெருஞ்சாந்திப் பெருவிழாவினையும் செய்து முடிக்க விநாயகப் பெருமான் அடியார்களது நிதி மற்றும் பொருளுதவி வேண்டப்படுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment