சித்தன்கேணி பெரியவளவு ஸ்ரீ மகா கணபதிப்பிள்ளையார் ஆலய பரிபாலனசபையினராகிய நாம் எம்பெருமானின் திருப்பணியில் அனைவரையும் ஒன்றிணைத்து செல்ல விரும்புகின்றோம். இருப்பினும் எம்பெருமானின் அடியவர்கள் இலங்கையின் பலபாகங்களிலும் மற்றும் வெளிநாடுகளிலும் வசித்து வருகின்றனர். எல்லோரையும் நேரடியாக தொலைபேசி (phone) மூலமாகவோ அல்லது தபால் (mail) மூலமாகவோ தொடர்புகொள்ள நாங்கள் சித்தமாக உள்ளோம். இருப்பினும் அனைவரினதும் முகவரிகள் (address) மற்றும் தொலைபேசி இலக்கங்களைப் (telephone numbers) பெறுவதில் சிரமம் காணப்படுகின்றது. அன்பர்களே தாங்கள் தங்களுடைய மற்றும் தங்களுக்கு தெரிந்த எம்பெருமான் அடியவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்களை கீழ்காணும் முகநூல் பக்கத்தினூடாகவோ (facebook group) தனிப்பட்ட செய்தியாக அனுப்பின் அது எமக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்பதனை தாழ்மையுடன் அறியத்தருகின்றோம்.
ஆலய பரிபாலனசபைத் தலைவர் மற்றும் செயலாளரினை நேரடியாகத் தொடர்புகொள்ள விரும்புபவர்கள் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்தினூடாகவும் தொடர்புகொள்ள முடியும்என்பதனையும் அறியத்தருகின்றோம்.
1. பூ. சிவகுமரன் (தலைவர், பரிபாலனசபை) - 0778063623
2. வே. பரந்தாமன் (செயலாளர், பரிபாலனசபை) - 0772834558
2. வே. பரந்தாமன் (செயலாளர், பரிபாலனசபை) - 0772834558
No comments:
Post a Comment